Tag Archives: Sivarts

National Farmer’s Day!

national_farmer_s_day__by_sivadigitalart-dastesv

National Farmer’s Day!

கோடானகோடி நன்றிகள் சமர்ப்பணம்
பூவுலகின் பிதாமகன்
விவசாயி.
தேசிய விவசாயிகள் தினம்!

விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்க இந்த பிறவி போதாது!. இப் பூவுலகின் பிதாமகன் விவசாயிக்கு என் சார்பாகவும், என் நண்பர்கள் மற்றும் மக்கள் சார்பாகவும் நன்றிகள் சமர்ப்பணம்.
#NationalFarmersDay #FarmersDay #Dec23 #indian #farmer #art #love #sivadigitalart

https://www.behance.net/gallery/46679573/xdg

RIP Dr. M. Balamuralikrishna.

 

rip-balamuralikrishna-sir-sml-02

RIP Dr. M. Balamuralikrishna.
He will be remembered for ages.
#RIP #Balamuralikrishna #Carnatic #music #legend #art #sivadigitalart

Soodhu Kavvum 2013 | Film Review & Cartoon!soodhu-kavvum-cartoon extended

சூது கவ்வும் 2013
Rating: 3/5 | Worth Watching
Genre: Comedy Thriller, Crime

தன் புதிய திரைப்பட அனுபவத்தை தமிழ் திரை உலகிற்க்கு அறிமுகப்படுத்தும் வண்ணம், புதிய திரைக்கதை சித்தாந்தத்துடன் களம் இறங்கியுள்ளார் “நாளைய இயக்குனர்” புகழ் அறிமுக இயக்குனர் “நலன் குமாரசாமி”.

முன்னணி கதாப்பாத்திரமான “விஜய் சேதுபதி” யின் நடிப்பும், வசனமும் படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது. “விஜய் சேதுபதி” யின் நடிப்பில் வெளிப்படும் யதார்த்தமும், அலட்சியப்போக்கும் “தாஸ்” கதாப்பாத்திரத்திற்க்கு ஒரு பக்கபலம்.

தாஸ்(விஜய் சேதுபதி) யின் கற்பனை நண்பர் கதாப்பாத்திரமாக வலம்வரும் “சஞ்சிதா ஷெட்டி”, படத்தின் விறுவிறுப்பான கதையில் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கும் மசாலா இணைப்பு (அல்லது) மெருக் ஏற்றிய “கவர்ச்சி” பொம்மை.

மற்ற துணை நடிகர்களான சிம்ஹா, அஷோக், ரமேஷ், கருணா கரன், CJ.பாஸ்கரன், ராதா ரவி மற்றும் ரஞ்சித் இவர்களின் கூட்டணி திரைக்கதைக்கு கூடுதல் பலம்.

“சந்தோஷ் நாராயண்” இன் பின்னணி இசை, “தினேஷ் கிருஷ்ணன்” இன் ஒளிப்பதிவு மற்றும் “லியோ ஜான் பால்” இன் தொகுப்பாக்கம் திரைப்படத்தின் வெற்றிக்கு துணை நிர்க்கும் புதிய பரிமானத்தின் விடியல்.

“சூது கவ்வும்” திரைப்படம் சிறந்த படமா?, இல்லையா? என்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்டது! இது சினிமா விமர்சன கோட்பாடுகளில் அடங்காத சிறந்த “Entertainer” ஆகத்தான் நான் பார்கிறேன்.

நாள்தோறும் உழைத்து களைப்பில் வரும் தொழிலாளிக்கும், அலுவலக வேலைகளை முடித்துவிட்டு களைப்பிலும், கடுப்பிலும் வரும் ஊழியர்களுக்கும், இம் “மே”மாதம் வெயிளுக்கு இரையாகாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் பொதுமக்கள் அனைவருக்கும், வெப்பத்திற்க்கு இணையாக நிழலில் இளைப்பாற ஆறுதலாய் கிடைத்த குளிர்ந்த “இளநீர்” போன்றது இந்த பரபரப்பான முழுநீள பொழுதுபோக்கு திரைப்படம் “சூது கவ்வும்”.

நடுவுல கொஞ்சம் பக்கத்த கானும், பீட்ஸா, அட்ட கத்தி வரிசையில் இன்று “சூது கவ்வும்”.

சூது கவ்வும்: மனதை கவ்வியது !!!
Siva Kumar