Tag Archives: dhanush

Happy Birthday DHANUSH 🙂

Happy Birthday D H A N U S H, turns 30 :)Profile Pic Template

Happy Birthday Actor DHANUSH, turns 30:’)
Wish you a Many More Happy Returns of the Day!

***This is Mariyaan, Kadal Rasa’s birthday special***
—> If you are interested then go to my timeline and have a look at Mariyan Cover Photo and profile pic…
—> then download the good quality image from the link http://wp.me/p3tZF9-26
—> Save as Cover-Photo21.jpg and Profile Pic Template.png
—> place your image below the *.png layer…
—> apply Scale to fit!
🙂

Mariyan 2013 |Film Review & FanArt Poster!

Mariyan 2013 |Film Review & Fanart Poster

மரியான் 2013! (Mariyan)
Rating: 3.5/5 | GOOD ATTEMPT
Genre: Love, Drama, Thriller

தமிழ் சினிமா தொடங்கியது முதல் இன்று வரை காதல் மற்றும் காதலை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களின் மூலம், பல மாறுபட்ட கோணத்தில் காதலை கண்டு வரும் நமக்கு, மற்றுமொரு புதிய கோணத்தில் ‘காதல் கதை’ இந்த “மரியான்”.

நீர், நிலம், கடல், காற்று, பனி, வெப்பம் என பல இயற்கை வண்ணங்களில், வடிவங்களில் ஜோடித்துப்பார்த்த நம் காதல், “அந்த இயற்கை சக்தியையே எதிர்த்து நிற்கும் வலிமை தரக்கூடிய ஆற்றலுடையது” என்று புதியதொரு காதல் சித்தாந்தத்தை வலியுறுத்தும், எளிய காதல் கதையுடன் களமிறங்கியுள்ளார் இயக்குனர் பரத்பாலா!

தமிழில் மரியான் திரைப்படத்தை இயக்கியதன் மூலன் தன்னை இயக்குனராக அறிமுகம் செய்துள்ளார் பரத்பாலா! சற்று நிதானமாக பயணம் செல்லும் திரைக்கதையாக இருப்பினும் பரத்பாலாவின் இயக்கம் கதைக்கு வர்ணனை! திரைக்கதைக்கேற்ப அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்! அதிலும் தனுஷின் நடிப்பைப்பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை எனலாம்… தன்அற்புதமான நடிப்பின் மூலம் அரங்கத்தில் கைத்தட்டல் ஆரவாரம்! அதேசமயம் அற்புதமான நடிப்பின் மூலம் மனதைகவர்ந்தாளும் Superstar-இன் சாயல் அங்கும் இங்கும் அலைமோதுகிறது! மேலும் தொடர்ச்சியாக ஒரே பாணி கதப்பதிரத்தில் நடித்து வருவது சலிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது! பார்வதி மேனன் தன் எளிமையான நடிப்பின் மூலம் மனதை கவர்கிறார்.

ரஹ்மான் பின்னணி இசை மழையில் நனைந்தபடி, (Auro 3D Sound Recording) 11.1 Surround System மிரட்டலுடன் திரையில் வலம் வரும் ஒளிப்பதிவு காட்சிகள் என திரையரங்கில் காண்போர் கண்களுக்கும், செவிகளுக்கும் புத்துணர்ச்சி… அமர்க்களம்… அட்டகாசம்!

மரியான்: காதலித்துப் பார்!
-சிவா

(திரைப்படத்தை நான் “திருட்டு DVD” யிலோ அல்லது “டவுன்லோட்” செய்துதான் பார்ப்பேன் என்பவர்களுக்கும், “ஒலியும்-ஒளியம்-இனையும்-சுவையும்” பருகத்தெரியதர்வர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!)