Tag Archives: Comedy

Birdman 2014 | FanArt Poster.

Birdman 2014 | FanArt Poster.

birdman_2014___fanart_poster__by_sivadigitalart-d8ja0o0 (1)

Birdman 2014 | FanArt Poster.

‘Birdman’ wins four Oscars at the 87th Academy Awards, including best picture, Best Director, Best Original Screenplay, and Best Cinematography.

Note: The Maze which i have portrayed is the similar one used in the film. They built a three-level maze, a labyrinth of corridors that connected to itself and different entry points. Mr. Thompson said in an interview at The Times. “I designed it in a way where I would make it confusing so that people wouldn’t understand the geometry.” That included building stairs and stairwells.

‪#‎Birdman #AlejandroGonzálezIñárritu #MichaelKeaton‬ ‪#‎film‬ ‪#‎FanArt‬ ‪#‎poster‬ ‪#‎Oscar2015‬ ‪#‎minimal‬ ‪#‎art ‪#‎sivadigitalart‬

PK 2014 | FanArt Poster

20150111-030944 pm-54584351.jpg

PK 2014 | FanArt Poster
#‎PK‬ ‪#‎Aamirkhan‬ ‪#‎movie‬ ‪#‎abstract‬ ‪#‎minimal‬ ‪#‎fanart‬ ‪ ‪#‎art‬ ‪#‎sivadigitalart‬
(This art is just a creative representation of the movie and doesn’t intend to hurt the sentiments of people.)
Movie Info: http://en.wikipedia.org/wiki/PK_%28film%29

20150111-030944 pm-54584783.jpg

Thank you for watching.

Moodar koodam 2013 | Film Review

மூடர்கூடம் 2013!
Moodar Koodam 2013 | Rating: 3/5 | Good Attempt | Worth Watching
Genre: Black Comedy, Crime

ஊரில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி திரைப்படம் எடுக்கும் கூட்டம் ஒருபுறம் இருக்க, தான் அறிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னிடம் உள்ள திறமையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் வரவேற்கத்தக்கவை! இந்த வரிசையில் மற்றுமொரு திரைப்படம் Pasanga Productions, “பாண்டிராஜ்” தயாரிப்பில், அறிமுக இயக்குனர் “நவீன்” இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள “மூடர்கூடம்” திரைப்படம்.

Lock Stock and two Smoking Barrels, Hot Fuzz மற்றும் Big Nothing போன்று Screenplay-வை மையமாக வைத்து எடுக்கப்படும் ஆங்கிலம் மற்றும் பிற மொழி திரைப்படங்களின் வரிசையில் தமிழில் சூதுகவ்வும், நேரம், மூடர்கூடம் ஆகிய திரைப்படங்களின் வருகை தமிழ் சினிமாவை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்கிறது என்றால் அது மிகையாகாது.

இந்த புதிய மாற்றத்தை வரவேற்கும் அதே சமயம் இதுபோன்ற படங்களின் பின்னணி இசையை பற்றி பேசியேஆகவேண்டும். ஒரு build-up பாடல், இரண்டு டூயட் மற்றும் இரண்டு குத்துப்பாட்டு என எண்ணிக்கையை அதிகரிக்க பாடல்கள் என்னும் மசாலா சித்தாந்தத்தை முறியடித்து, தேவைகேற்ப பின்னணி இசை மற்றும் பாடல்கள் எனும் புதிய பரிமாணத்திற்கு உயிரூட்டிவரும் இயக்குனர்கள் மற்றும் இசை அமைப்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

புதுமையான Screenplay வடிவம் கொண்ட திரைப்படங்களின் வருகை நம் தமிழ் திரையுலகில் வரவேற்கதக்க ஒன்று. எளிமையான கதை, இயல்பான நடிப்பு, சராசரி வசனங்கள் என யதார்த்தமாக தயாரிக்கப்பட்டுள்ளது “மூடர்கூடம்” திரைப்படம். அதேசமயம் “Attack the Gas Station” திரைப்படத்தின் கதை ஏறத்தாழ ஒற்றுபோகிறது.

“மூடர்கூடம்” புதுமையான Screenplay -ஆக இருப்பினும், மேலும் சுவாரஸ்யத்தை கூட்ட சற்று வேகத்தை அதிகரித்திருக்கலாம்! குறிப்பாக இரண்டாம் பாகத்தில் அறிமுகமாகும் கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் தருவாயில், கடைப்பிடிக்கப்பட்டிருக்கும் அமைதியானது பார்வையாளர்களின் (audience) பொறுமையை சற்று சோதிக்கிறது எனலாம்! கதையில் உள்ள முக்கிய கதாப்பாத்திரங்கள் முதல் “பொம்மை” வரை ஒரு flashback கதை மற்றும் தனிப்பட்ட இசை என இயக்குனர் “நவீன்” எடுத்துள்ள புதிய முயற்சிகள் அனைத்தும் வரவேற்கத்தக்கது! குறிப்பாக இறுதியில் வரும் “பொம்மை” கதையின் பின்னணி இசையாக “கே.ஜே.ஜேசுதாஸ்” குரலில், “கவிஞர் வாலி” வரிகளில் 1964ல் வந்த “பொம்மை” திரைப்படத்தின் “நீயும் பொம்மை நானும் பொம்மை“ பாடலுக்கு புத்துயிர் அளித்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

“மூடர்கூடம்” முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக இருப்பினும் சில இடங்களில் சமுதாய கண்ணோட்டத்தில் காட்சிகளை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் நவீன். எழுத்து, இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பல பரிமாணத்தில் வலம் வந்துள்ள “நவீன்”, இதற்க்குமுன் இயக்குனர் “சிம்புதேவன்” மற்றும் “பாண்டிராஜ்” இவர்களிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். Screenplay-க்கு ஈடுகொடுக்கும் முயற்சியில் எடிட்டிங் (ஆதியப்பன் சிவா), போதுமான அளவில் தேவைக்கேற்ப கேமரா (டோனி சான்), இசை (நடராஜன் சங்கரன்) மற்றும் சென்ட்ராயன்-இன் தனிப்பட்ட நடிப்பு அனைத்தும் நன்று.

#மூடர்கூடம் : பெருமைக்குரியது, சற்று பொறுமையும் தேவை!

-சிவா | செப்டம்பர் 2013
(திரைப்படத்தை நான் “திருட்டு DVD” யிலோ அல்லது “டவுன்லோட்” செய்துதான் பார்ப்பேன் என்பவர்களுக்கும், “ஒலியும்-ஒளியம்-இணையும்-சுவையும்” பருகத்தெரியதர்வர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!)

Soodhu Kavvum 2013 | Film Review & Cartoon!soodhu-kavvum-cartoon extended

சூது கவ்வும் 2013
Rating: 3/5 | Worth Watching
Genre: Comedy Thriller, Crime

தன் புதிய திரைப்பட அனுபவத்தை தமிழ் திரை உலகிற்க்கு அறிமுகப்படுத்தும் வண்ணம், புதிய திரைக்கதை சித்தாந்தத்துடன் களம் இறங்கியுள்ளார் “நாளைய இயக்குனர்” புகழ் அறிமுக இயக்குனர் “நலன் குமாரசாமி”.

முன்னணி கதாப்பாத்திரமான “விஜய் சேதுபதி” யின் நடிப்பும், வசனமும் படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது. “விஜய் சேதுபதி” யின் நடிப்பில் வெளிப்படும் யதார்த்தமும், அலட்சியப்போக்கும் “தாஸ்” கதாப்பாத்திரத்திற்க்கு ஒரு பக்கபலம்.

தாஸ்(விஜய் சேதுபதி) யின் கற்பனை நண்பர் கதாப்பாத்திரமாக வலம்வரும் “சஞ்சிதா ஷெட்டி”, படத்தின் விறுவிறுப்பான கதையில் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கும் மசாலா இணைப்பு (அல்லது) மெருக் ஏற்றிய “கவர்ச்சி” பொம்மை.

மற்ற துணை நடிகர்களான சிம்ஹா, அஷோக், ரமேஷ், கருணா கரன், CJ.பாஸ்கரன், ராதா ரவி மற்றும் ரஞ்சித் இவர்களின் கூட்டணி திரைக்கதைக்கு கூடுதல் பலம்.

“சந்தோஷ் நாராயண்” இன் பின்னணி இசை, “தினேஷ் கிருஷ்ணன்” இன் ஒளிப்பதிவு மற்றும் “லியோ ஜான் பால்” இன் தொகுப்பாக்கம் திரைப்படத்தின் வெற்றிக்கு துணை நிர்க்கும் புதிய பரிமானத்தின் விடியல்.

“சூது கவ்வும்” திரைப்படம் சிறந்த படமா?, இல்லையா? என்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்டது! இது சினிமா விமர்சன கோட்பாடுகளில் அடங்காத சிறந்த “Entertainer” ஆகத்தான் நான் பார்கிறேன்.

நாள்தோறும் உழைத்து களைப்பில் வரும் தொழிலாளிக்கும், அலுவலக வேலைகளை முடித்துவிட்டு களைப்பிலும், கடுப்பிலும் வரும் ஊழியர்களுக்கும், இம் “மே”மாதம் வெயிளுக்கு இரையாகாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் பொதுமக்கள் அனைவருக்கும், வெப்பத்திற்க்கு இணையாக நிழலில் இளைப்பாற ஆறுதலாய் கிடைத்த குளிர்ந்த “இளநீர்” போன்றது இந்த பரபரப்பான முழுநீள பொழுதுபோக்கு திரைப்படம் “சூது கவ்வும்”.

நடுவுல கொஞ்சம் பக்கத்த கானும், பீட்ஸா, அட்ட கத்தி வரிசையில் இன்று “சூது கவ்வும்”.

சூது கவ்வும்: மனதை கவ்வியது !!!
Siva Kumar