கதையின் பெயர் “அட*ச்சே”

ஒரு கதை சொல்லப்போறேன்!
கதையின் பெயர் “அட*ச்சே” !!!

20131108-033101 PM.jpg
Support Elderly People!

காலை 9 மணி, ஆபீஸ்-க்கு சென்றுகொண்டிருந்தேன்! வழியில் ஒரு மூதாட்டி நின்று கொண்டிருந்தார், வயது சுமார் 80க்கும் மேல் இருக்கும்! பேசுவதே புரியவில்லை, மழலைக் குரல், தள்ளாடும் நடையுடன் தெருவோரமாய் நின்றுகொண்டு எதையோ அவர் கேட்டுக்கொண்டிருந்தார்! எதிரில் ஒருவர் வந்தார் வயது 45-55 இருக்கும்! அந்த மூதாட்டி அவரிடம் எதையோ சொன்னார் அதற்கு அவர் “அட போம்மா” என புலம்பிக்கொண்டே என்னை கடந்து சென்றார்! மூதாட்டி ஒரு வேலை பணஉதவி கேட்டிருப்பாங்களோ? அதான் இவர் இப்படி புலம்பியபடி செல்கிறார்; என்றெல்லாம் எண்ணங்கள் மனதில் வட்டமிட்டன! மூதாட்டி அருகில் சென்று, என்ன-மா? என்று கேட்பதற்கு முன் அவரே என்னிடம் கேட்டார்! “ரோடுக்கு அந்தப்பக்கம் விடு தம்பி” -மழலைக்குரலில்! அட*ச்சே! (இதுக்கா புலம்பினாரு? இங்கு பிறகு வருவோம்)

“என் கையை பிடிமா” என்று சொல்லியபடி மூதாட்டியுடன் நிதானமாய் 5அடி எடுத்துவைத்தேன்! “போதும்-பா நான் போயிடுவேன்” என்று சொல்லியப்படி ரோட்டை கடந்து சென்றுவிட்டார்! சுமார் 40அடி ரோடு, அதில் ஒருபக்கம் ஆட்டோவும் மறுப்பக்கம் ஒரு மினி வேனும் நின்றுகொண்டிருந்தது! அதாவது சுமார் 15அடி வீணாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது! இடையில் இருந்த 20அடிதான் போக்குவரத்துக்கு மிஞ்சியது! அந்த 20அடியில் 5-6அடி மட்டுமே நான் உதவியுள்ளேன்! நிதானமாக நடந்ததால் செலவிடப்பட்ட நேரம் 30வினாடி முதல் அதிகபட்சம் 1நிமிடம்!

தள்ளாடும் வயதில் அவர்களுக்கு தேவை துணையான-ஆறுதல் மட்டுமே தவிர பணமோ, பொருளோ அல்ல! இந்த ஒருநிமிடத்தில் நான் பெற்றது என்ன? அல்லது இழந்தது என்ன? என்பதை பேசுவதை விட, புலம்பியபடி சென்ற அந்த “வயதில்-பெரியவர்” அவர்களுக்கு ஒரு வேலை பிற்காலத்தில் இந்த ஒரு நிமிடம் தேவைப்பட்டால் அங்கு எங்களைப்போல் ஒருவன் கரம் கொடுத்து உதவ வேண்டிக்கொள்கிறேன்!
முற்றும்
சிவா

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s