Vishwaroopam 2013 | Film Review

Vishwaroopam 2013 | Film Review

இந்திய சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்: விஸ்வரூபம் 2013!
(ரேட்டிங்: 3 / 5)

மதம், வியாபாரம், அரசியல் என பல சர்ச்சைகளுக்குப் பின் தடைகளை வென்று சரித்திரம் படைக்க வெளியானது கமலஹாசனின் “விஸ்வரூபம்” திரைப்படம். தயாரிப்பு, இயக்கம், நடிப்பு என மூன்று ரூபங்களில் திரையில் காட்சியளிக்கிறார் “கமல் ஹாசன்”. ஒரு வேலை சர்ச்சைகள் இன்றி இந்தப்படம் வெளியாகிஇருந்தால் இதே வரவேற்ப்பு கிடைத்திருக்குமா? என்ற கேள்விக்கு ‘மௌனம்’ மட்டுமே பதிலாக வந்திருக்கும்.

ஆச்சிர்யப்பட தேவையில்லை என்றாலும் இங்கு பதிவு செய்தேஆகவேண்டும்; அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நம் “உலக நாயகன்”, “கதக்” நடன ஆசானாக நளினம் மற்றும் பாவங்களெல்லாம் சொல்லிலும், உடலில் பூண்டு திரையில் வலம் வரும்போதும், பிறகு திடீரென விஸ்வரூபமெடுத்து வில்லன்களை அடித்து நொறுக்கும் போதும் திரைஅரங்கில் ரசிகர்களின் கைதட்டலும், ஆரவாரமும் இணையாக விஸ்வரூபம் எடுக்கிறது. உளவாளியாக, போர் வீரனாக, ஜிஹாதியாக பல ரூபங்களில், பல உருவங்களில் பட்டைகெளப்புகிறார் “கமல்”.

அதிக வசீகரிக்காத கதையாக இருப்பினும், தமிழ் சினிமா வரலாற்றில் புதியதொரு கோணத்தில் திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் & நியூயார்க்கில் ஒளிப்பதிவு, 3D ஒலி வடிவம், நவீன சண்டைக்காட்சிகள் என காண்போர் கண்களுக்கும், செவிகளுக்கும் விருந்தளிக்கும் வண்ணம் பல நுண்ணிய வேலைப்பாடுகளுடன் மிக சிறப்பான முறையில் தேர்வு செய்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஒலியை பற்றி பேசியாகவேண்டும், இப்படம் புதிய ஆரோ 3D (11.1.) ஒலி தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை தனதாக்கிக்கொண்டது, மற்றும் உலகளவில் இரண்டாவது படம் ஆகும். இந்தியாவில் முதல் முறையாக, சென்னையில் “சத்யம்”, “மாயாஜால்” மற்றும் “சுந்தர்” திரையரங்குகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து Mysore “DRC சினிமாஸ்” இந்த ஒலி தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதன் மூலம் நாட்டின் இரண்டாவது மாநிலமாக திகழ்கிறது. (சில மாதங்களுக்கு முன் வெளியான “பீட்சா” திரைப்படம் தமிழில் முதல் முறையாக 7.1 சவுண்ட் சிசுடம் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.) தமிழ் திரைப்படத்துறைக்கு “கமல் ஹாசன்” அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள் பல, அவர் ஆற்றிய வரலாற்று பணிகள் பல பின்வரும் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று சொனால் அது மிகையாகாது. இதற்க்கு “விஸ்வரூபம்” திரைபடமும் விதிவிலக்கல்ல.

“விஸ்வரூபம்” படத்தின் கதாநாயகியான அமெரிக்க நடிகை, “பூஜா குமார்”ன் நடிப்பு சிறப்பாக இருந்தது. காதல், காதலித்தல், அரைகுறை ஆடை, அரைகுறை மொழியில் வசனம் என, இரண்டு குத்து பாட்டுக்கு ஆட்டம் ஆடிவிட்டு செல்லும் வாடிக்கையான மசாலா நடிகைகளை கண்டிருந்த கண்களுக்கு ஒரு புத்துணர்ச்சி “பூஜா குமார்”.

“திரைபடத்தில் சித்தரிக்கப் பட்டிருக்கும் பல சம்பவங்கள் நிஜம் மற்றும் அதர்க்காண எடுத்துக்காட்டு சான்றுகளை முன்வைத்து தான் எடுக்கப்பட்டுள்ளது என்பதால், பலவீனமானவர்கள் மனதை திடப்படுத்திக்கொண்டு பார்க்குமாறு படம் ஆரம்பத்தில் அறிவிக்கபடுகிறது” ஆனால் திரைப்படம் துடங்கியது முதல் முடிவு வரை எங்குமே கதையின் பின்னணியோ அல்லது இருநாடுகளுக்கு மத்தியில் நிலவும் பிரச்சனைகளை பற்றிய அலசலோ, அல்லது ஒரு சில வரலாற்று துணுக்குகளோ சற்றும் இடம்பிடிக்கவில்லை என்பதனால் ஏமாற்றமே எஞ்சுகிறது! வலிமையிழந்து காணப்படும் சில கதாப்பாத்திரங்கள் மற்றும் தெளிவில்லாத வசனங்கள் என கதையின் பலம் குறைந்து, இரண்டாம் பாகம் நகரமுடியாமல் தடுமாறுகிறது. “எடிட்டிங்” மற்றும் “கிராப்கிக்ஸ்” துறைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும்! அதிலும் குறிப்பாக “எடிட்டிங்” இல் தேர்ச்சி அவசியம்.

ஆங்கிலம் மற்றும் பிறமொழி திரைப்படங்களின் தாக்கங்கள் அங்கு இங்கு திரையில் உலா வருகிறது. அதில் குறிப்பாக 2007 இல் வெளிவந்த “ரஷ்யன்” திரைப்படம் “The Code Apocalypse” கதைக்கருவும், “விஸ்வரூபம்” கதையும் ஏறத்தாழ ஒற்றுபோகிறது! ஒலிக்கு இணையாக படத்தில் சண்டைக்காட்சிகள் ஒரு சவாலாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது. குறிப்பாக “Sherlock Holmes” படத்தில் வருவது போன்ற சண்டைக்காட்சி ரசிகர்களின் ரசனைக்கும், எதிர்பார்ப்புக்கும் ஏற்ற தீனிஎனலாம்.

உன்னால் முடியும் தம்பி, நம்மவர், தேவர் மகன், விருமாண்டி (சண்டியர்), என பல பரிமானங்களில் நம்மை சுற்றியுள்ள சமுதாய பிரச்சனைகளை, பூசல்களை மையமாகவைத்து அமைதி நாடி திரையில் உலா வந்த “கமல்” திடீரென “அமெரிக்க” & “ஆப்கானிஸ்தான்” பிரச்சனையை மையமாகவைத்து “அமெரிக்க” அமைதிக்காக எடுத்திருக்கும் அவதாரம் தான் இந்த “விஸ்வரூபம்” (அப்போ நம்ம உள்ளூர் மக்களுடைய கதி?). “நாசர்” மற்றும் “ஆண்ட்ரியா ஜெரெமையா” கதாப்பாத்திரங்கள் கதைக்கு அவசியமா? “அமெரிக்கா” மற்றும் “ஜிஹாதி”களின் பின்னணிதான் என்ன? கதாநாயகன் உண்மையில் எந்த நாட்டிற்க்காக பணிபுரிகிறார்? உண்மையான பெயர் மற்றும் கதாபாத்திரத்தின் முகவரிதான் என்ன? இதுபோன்று மனதில் எழும் பல கேள்விகளுக்கு விடை “விஸ்வரூபம்” இரண்டாம் பகத்தில் “உலக நாயகன்” பதில் அளிப்பார் என்ற ஆவளுடன் காத்துக்கொண்டிருக்கும் கோடானகோடி ரசிகனில் நானும் ஒருவன்.

விஸ்வரூபம்: முதல் பாகத்தில் இல்லை!

Siva Kumar | Feb 2013

(திரைப்படத்தை நான் “திருட்டு DVD” யிலோ அல்லது “டவுன்லோட்” செய்துதான் பார்ப்பேன் என்பவர்களுக்கும், “ஒலியும்-ஒளியம்-இனையும்-சுவையும்” பருகத்தெரியதர்வர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s